Miku – the crow | A true story

2018, ஜூன் 22ஆம் நாள் காலை சுமார் 7 மணிக்கு எங்கள் வீட்டு பின்புறம் ஒரு காகத்தை ஒரு பெரிய அண்டங்காக்கா குத்திக்கொண்டிருந்தது. உடனே அதை விரட்டி விட்டு அடிப்பட்ட காகத்தை வீட்டிற்குள் கொண்டு வந்தோம். அதன் சில இறகுகள் பிய்க்கப்பட்டு, இடது கண்ணும் கொத்தப்பட்டு இருந்தது.

அதற்கு இறகுகள் முளைக்கும் வரை காப்பாற்ற ஒரு பெரிய கூண்டு வாங்கினோம்.

மருத்துவரை வரவழைத்து, அவர் ஆலோசனைப்படி ‘ மீக்கு’ என்ற அந்த காக்கைக்கு வைட்டமின் சொட்டு மருந்தும், இன்ஃபெக்ஷன் வராமல் இருக்க சொட்டு மருந்தும் கொடுக்க ஆரம்பித்தோம்.

ஒரு வாரம் தேன் கொடுத்ததில் அடிப்பட்ட கண் நன்றாக குணமாகி விட்டது. இப்பொழுது இறக்கையும் முளைக்க ஆரம்பித்துள்ளது.

‘மீக்கு’விற்கு முறையாக உணவும், நீரும் கொடுக்கின்றோம். மேலும் அதன் கூண்டையும் அவ்வப்போது சுத்தம் செய்து ஆரோக்கியமான சூழ் நிலையில் வைத்திருக்கிறோம்.

இறைவன் அருளால் ‘மீக்கு’வின் இறக்கை நன்கு முளைத்தப்பின் அதை சந்தோஷமாக பறக்க விட்டுவிடுவோம்.

On July 22,2018 We rescued a crow that was attacked by a Raven.The Crow, when rescued had injury in its eyes, beak and feathers. We named the crow ‘Miku’. We are taking care of Miku.

As per Vet’s prescription we gave Vitamins and Antibiotics. Miku is Showing improvement – Miku’s eyes and beak are normal now. Miku will be under our care until his/her feather grows well.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

You're currently offline - Connect to Mobile Data / Internet to use this App

Scroll to Top